வென்ரநில்-கலந்த கொக்கெயினால் மரணம்?

Report
28Shares

கனடா-சஸ்கற்சுவான் பொதுமக்களை பொலிசார் எச்சரிக்கின்றனர். குற்றம் சாட்டப்பட்ட போதை மருந்து வியாபாரி ஒருவர் விற்பனை செய்த கொக்கெயினை வாங்கியவர்கள் அவைகளை உடனடியாக திரும்ப கொடுக்குமாறு பொலிசார் எச்சரித்துள்ளனர். அதிக அளவு பாவனை மற்றும் மரணங்கள் வார இறுதியில் நடந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வியாபாரியிடம் வாங்கப்பட் கொக்கெயினில் மரணத்தை ஏற்படுத்த கூடிய அளவிலான ஓபியோயிட் கலந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை வாங்கியவர்கள் அவைகளை பொலிசாரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

48-வயதுடைய பெண் ஒருவர் உபயோகித்த இடத்திலேயே இறந்துள்ளார். மற்றொரு மனிதன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மரணமானார்.

மேலும் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25-வயதுடைய பெண் ஒருவர் இயக்கமற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை சம்பந்தமாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1752 total views