200 ஆண்டுகளில் இல்லாத சீற்றம்! வாடி வதைக்கபடும் பிரிட்டிஷ் கொலம்பியா!

Report
60Shares

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு பிராந்தியங்களில், கடந்த 200 ஆண்டுகளில் காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சுமார் 2,700 குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு உத்தரவிடட்டிருந்தது.

மக்கள் பாதுகாப்பான இடங்களை தேடி சென்றுள்ள நிலையில், மீண்டும் தங்கள் வீடுகளுக்கு செல்லும் நாளினை எதிர்நோக்கி உள்ளனர்.

கடுமையாக பெய்த கடும் மழையால், அங்குள்ள சில இடங்களில் மழைவீழ்ச்சியின் அளவு 50 மில்லிமீட்டர் வரையில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அங்குள்ள ஆறுகள் ஏரிகளில் நீர் மட்டம் குறிப்பிட்ட அளவு அதிகரித்துள்ளதுடன், இந்த நீர்மட்டம் மேலும் அதிகரித்து ஆபத்தான நிலையை எட்டக்கூடும் எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறித்த பிராந்தியத்தில் ஏற்பட்ட பருவநிலைக்கு மாறான திடீர் வெப்ப அதிகரிப்பு, பலத்த மழை மற்றும் பெருமளவு பனிக் கட்டிகள் உருகுதல் ஆகியவற்றால், வெள்ளப் பெருக்கு அபாயம் தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2428 total views