ஒன்ராறியோ வாக்குசாவடிகளில் தொழில் நுட்ப சிக்கல்கள்?

Report
25Shares

ஒன்ராறியோ மாகாணத்தில் இன்று இடம்பெறும் தேர்தல் மின்னணு வாக்கு சாவடிகள் பலவற்றில் தொழில் நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாக்கு பதிவுகள் பெரும்பாலான சாவடிகளில் சுமுகமாக இடம் பெறுவதாக தேர்தல் ஒன்ராறியோ தெரிவித்துள்ளது.

எத்தனை சாவடிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

வாக்களிப்பு மற்றும் எண்ணும் நடவடிக்கைகள் தொழில் நுட்பம் மூலம் விரைவு படுத்தப்படும் என கடந்த மாதம் தேர்தல் ஒன்ராறியோ அறிவித்திருந்ததாக அறியப்படுகின்றது.

எப்படியிருப்பினும் வாக்கு சாவடிகள் வியாழக்கிழமை தொழில் நுட்ப சிக்கல்கள் காரணமாக நீண்ட வரிசைகள் ஏற்பட்டுள்ளன.

வாக்களிப்பு செயல் பாட்டினால் ஏற்பட்ட ஏமாற்றத்தை மக்கள் சமூக ஊடகங்களை நாடியதாகவும் கூறப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கப்பட்ட சாவடிகள் இரவு 9 மணிக்கு மூடப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

1139 total views