கனடா தினத்தன்று கனடிய கடவு சீட்டு கட்டணம் உயருமா?

Report
60Shares

இணையத்தளங்களில் சுற்றோட்டத்;தில் விடப்பட்டிருக்கும் தவறான தகவல் கனடிய கடவுச்சீடடு கட்டணம் யூலை 1லிருந்து உயரும் என தெரிவித்துள்ளது.

யூன் மாதம் முகநூலில் பதிய பட்ட தகவல் பிரகாரம் ஐந்து வருடத்திற்கான கடவுச்சீட்டின் கட்டணம் டொலர்கள்120-லிருந்து 190 டொலர்களாக அதிகரிக்கும் எனவும் 10வருடங்களிற்கான கடவுச்சீட்டின் கட்டணம் டொலர்கள் 160-லிருந்து டொலர்கள் 260ஆக அதிகரிக்கும் எனவும் சிறுவர்களிற்கான கட்டணம் 57 டொலர்களிலிருந்து 100-டொலர்களாக அதிகரிக்கும் எனவும் தெரியவந்துள்ளது.

இப்பதிவு 200தடவைகளிற்கும் மேல் பகிரப்பட்டும் உள்ளது.

மற்றுமொரு முகநூல் பதிவு கிச்சினர் ஒன்ராறியோவை அடிப்படையாக கொண்டது-இதே போன்ற தவறான தகவலை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக பெரும்பாலான மக்கள் அவதிப்படுவதாக கூறப்படுகின்றது.

தகவலை வாசித்த ஒருவர் இது குறித்து கவலை கொண்டதை அடுத்து ஊவுஏநேறள.உய குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை கனடாவுடன் தொடர்பு கொண்டது.

முகநூலில் பதிவான விலைகள் வெளிநாடுகள் மற்றும் யு.எஸ். ஆகிய இடங்களில் இருந்து வழக்கமான மற்றும் சிறுவர்களிற்கான கனடிய கடவுச்சீட்டுகளிற்கான கட்டணங்கள் என கனடா குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

2457 total views