குழந்தையின் வாய்க்குள் சுணையுள்ள கம்பளிப்பூச்சி?

Report
38Shares

பிரிட்டிஷ் கொலம்பியா- எட்டு மாத குழந்கை ஒன்று சுணையுள்ள கம்பளிப்பூச்சி ஒன்றை தனது வாய்க்குள் போட்ட சம்பவம் நனய்மோ என்ற இடத்தில் நடந்துள்ளது. வாய்க்குள் இருந்த பிஸ்கட்டுடன் சேர்ந்துள்ளது.

தனது மகள் அவர்களது பின்புறத்தோட்டத்தில் இருந்ததாக குழந்தையின் தாயார் கிறிஸ்ரல் டான் பவன் தெரிவித்தார்.

குழந்தை அழுவதை பார்த்து படுக்கைக்கு அழுவதாக தாயார் நினைத்துள்ளார். ஆனால் குழந்தையின் வாய்க்குள் மின் தீக்காயங்கள் போன்ற கறுப்பு நிற அடையாளங்களை கவனித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டு அங்கு வைத்தியர்கள் குழந்தையை மயக்கமடைய செய்து நாக்கிலும் அவளின் நாக்கு மற்றும் கன்னத்திற்குள்ளும் இருந்த முட்களை பிடுங்கி எடுத்தனர்.

குழந்தை குணமடைந்து வருவதாக பவன் தெரிவித்தார்.

குறிப்பிடப்பட்ட கம்பளிப்பூச்சி சில்வர் நிற புள்ளியிடப்பட்டதுடன் எரிவை ஏற்படுத்த கூடிய கொடுக்கு முடிகளை கொண்டதென கூறப்பட்டுள்ளது.

கென்சியின் வாய்க்குள் இருந்து 98சதவிகிதமான கம்பளிப்பூச்சியின் பாகங்களை சத்திர சிகிச்சை மூலம் வைத்தியர்கள் வெளியேற்றி விட்டனர். இச்சம்பவம் ஒரு கடுமையான துன்பமாகும்.

கிட்டத்தட்ட ஒரு மணித்தியாலம் நீண்ட சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தை குணமடைந்து வருவதாக தெரிவித்த தாயார் தனது முகநூலில் அனைத்து பெற்றோர்களையும் அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளார்.


2096 total views