கப்பலில் இருந்து விழுந்த தமிழ் மனிதனை தேடும் பொலிசார்?

Report
319Shares

ரொறொன்ரோ-தமிழர் ஒருவர் ஞாயிற்றுகிழமை இரவு ஸ்காபுரோ பிளவஸ் பார்க்கிற்கு அருகில் படகில் இருந்து விழுந்து விட்டார். இவரை தேடும் முயற்சியில் பொலிசாரும் அவசர சேவை குழுவினரும் ஈடுபட்டுள்ளனர்.

இரவு 9.40-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.

ரொறொன்ரோ தீயணைப்பு சேவைகள் வில்லியம் லியோன் மக்கென்சி தீக்காப்பு படகின் உதவியுடனும், கனடிய கடலோர பாதுகாப்பு ஹெலிகொப்டரின் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு பூராகவும் இடம்பெற்ற தேடுதலில் கண்டு பிடிக்க முடியாமல் போனதால் திங்கள்கிழமை காலையும் தேடுதல் முயற்சிகள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.

படகில் சென்றவரின் பெயர் அல்லது வயது குறித்த விபரங்களை பொலிசார் வெளியிடவில்லை ஆனால் சம்பவ இடத்தில் நிருபர்களிடம் பேசியதிலிருந்து இவரின் உறவினர் என தெரிவித்த ஒருவரின் கூற்று பிரகாரம் காணாமல் போனவர் பார்த்திபன் சுப்பிரமணியம், வயது 27 என்றும் டவுன்ரவுன் ரிடி வங்கியின் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றுபவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இவர் DJ என அனைவராலும் அறியப்பட்டவர் எனவும் DJ Brownsoul என அழைக்கப்பட்டார் எனவும் சுப்பிரமணியத்தின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் வலுவான நிச்சலாளர் இல்லை என இவரது அங்கிள் தெரிவித்துள்ளதுடன் பாதுகாப்பு கவசம் அணிந்திருந்தாரா என கூற முடியவில்லை என அவசர சேவைகள் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

13657 total views