நெடுஞ்சாலையில் மூன்று வயது மகளை வாகனம் செலுத்த அனுமதித்த தாய்

Report
212Shares

ஒன்ராறியோவில் 33-வயதுடைய பெண் ஒருவர் அவரது 3-வயது பெண்குழந்தையை நெடுஞ்சாலை ஒன்றில் வாகனம் செலுத்த அனுமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

தாயின் மடியில் இருந்து காரின் ஸ்ரியரிங்கை பிடித்து கொண்டிருந்த காட்சி பல வீடியோக்களில் சமூக ஊடகங்கள் மூலம் பரவத்தொடங்கியதாக டர்ஹாம் பிரதேச பொலிசார் தெரிவித்தனர்.

வாகனம் அதிவேகமாக செலுத்தப் பட்டிருந்தது. தாயும் மகளும் இருக்கை பட்டிகள் அணிந்திருக்கவில்லை. பாதுகாப்பு தடைகள் எதுவும் இல்லை எனவும் அதிகாரிகள்

தெரிவித்துள்ளனர்;.

இச்சம்பவத்தை தாயார் அவரது கைத்தொலைபேசியிலும் பதிவு செய்துள்ளார்.

சந்தேக நபரை டர்ஹாம் பிராந்திய பொலிசார் அடையாளம் கண்டு கொண்ட போதிலும் குழந்தையின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கத்துடன் தாயாரி பெயரை வெளியிடவில்லை. குழந்தைகள் உதவி சமூகத்திற்கும் இச்சம்பவம் தெரியப்படுத்தப்பட்டது.

வாழ்வின் அவசியத்திற்கு தேவையான வழிவகைகளை ஒரு பெற்றார் வழங்கவில்லை என 33-வயதுடைய பிவெட்டன் ஒன்ராறியோவை சேர்ந்த பெண்மீது பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

அத்துடன் கவனக்குறைவான வாகனம் செலுத்தியமை, சாரதி இருக்கை பட்டி அணியாதது பாதுகாப்பற்ற நிலையில் குழந்தை ஒன்று இருக்கையில் வாகனம் செலுத்தியமை மற்றும் கையடக்க தகவல் சாதனம் உபயோகித்த வண்ணம் வாகனம் செலுத்தியமை போன்ற குற்றங்கள் சுமத்தப்பட்டது.

8798 total views