தீர்வு காணப்படாத யோர்க் பல்கலைக்கழக தமிழ் மாணவனின் கொலை!

Report
64Shares

ரொறொன்ரோ-21-வயதுடைய யோர்க் பல்கலைக்கழக வணிக துறை மாணவன் வினோஜன் சுதேசன் கடந்த மே மாதம் மால்வேர்னில் துப்பாக்கி சூட்டிற்கு இரையானான். தீர்வு காணப்படாத இக்கொலைச் சம்பவம் குறித்து புதிய தகவல்களை கோரி குடும்ப அங்கத்தவர்கள் இன்று ஒரு செய்தி கருத்தரங்கில் கலந்து கொள்கின்றனர்.

21-வயதுடைய வினோஜன் சுதேசன் ஸ்காபுரோவை சேர்ந்தவர்.Schulich ன் வணிக மாணவராவார்.

ரப்ஸ்கோட் வீதி மற்றும் வாஷ்பேர்ன் வேக்கு அருகாமையில் லெஸ்ரர் பி.பியர்சன் கல்லூரி நிறுவனத்தின் வெளியே மே 27 இரவு சுட்டு கொல்லப்பட்டார்.

இவரின் வருகைக்காக காத்திருந்ததாக பொலிசார் நம்பும் சந்தேகநபர் ஒருவர் சுதேசன் பிக்கிள் பரலில் வேலை முடிந்து உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் பதுங்கியிருந்து சுட்டதாக குடும்ப அங்கத்தவர்கள் முன்னர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பின்னர் துப்பாக்கியுடன் அவ்விடத்தை விட்டு ஓடியது கண்டுபிடிக்கப்பட்டது.

இக்கொலையின் நோக்கம் என்ன என்பதை பொலிசாரால் தீர்மானிக்க முடியவில்லை ஆனால் தவறான அடையாளம் காரணமாக அமையலாம் என கருதப்பட்டதாக அறியப்படுகின்றது.

சந்தேக நபர் 5.10உயரமுடைய இருண்ட தோல் கொண்ட ஆண், வெள்ளை அல்லது மெல்லிய நிறமுடைய தொப்பியுடன் கூடிய மேலாடை மெல்லிய பிரவுன் நிற காக்கி காற்சட்டை அணிந்திருந்ததாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை 5-மணிக்கு இடம்பெற உள்ள செய்தி மகாநாட்டில் கொலை துப்பறிவாளர் அன்டி சிங்த், ரொறொன்ரோ நகர கவுன்சிலர் நீதன் ஷான் மற்றும் குற்றவாளிகளின் பிரதிநிதிகள் ஆகியவர்கள் கலந்து கொள்கின்றனர்.

3143 total views