தொடரும் வெப்பத்தால் அதிகரிக்கும் மரணம்!

Report
185Shares

கியுபெக்-கடந்த வெள்ளிக் கிழமையில் இருந்து வெப்பம் காரணமாக ஏற்பட்டுவரும் மரண எண்ணிக்கை 16-ஆக அதிகரித்துள்ளது.

பல தசாப்தங்களில் கியுபெக் மாகாணத்தில் ஏற்பட்பட மிக மோசமான தாக்கம் இதுவாகும்.

மொன்றியலிலும் புதன்கிழமை காலை அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கை 11-ஆக அதிகரித்துள்ளதாக நகரின் பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

மொன்றியலில் வீடுகளில் காற்று பதனாக்கம் இன்மை மற்றும் சுகாதார பிரச்சனைகள் உள்ளவர்கள் வெப்பத்தினால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு பகுதிகளின் உள்ளே வெப்பநிலை 30-ற்கும் மேலாக அதிகரித்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.

வெப்பமான வீடுகளிற்குள் காற்று பதனாக்கி இன்றி ஒரு சில நாட்கள் இருப்பதால் உடலின் தழுவிக்கொள்ளும் திறனை முறியடிக்கின்றது.

நகர பணியாளர்கள் விடுகளின் கதவுகளை தட்டி இதே போன்ற நிலைமைகள் காணப்படுபவர்களிற்கு தேவையான மருத்துவ உதவி அல்லது குளிராக்கும் புகலிட வசதிகளை செய்து வருகின்றனர்.

ஈரப்பதனுடன் கூடிய வெப்பம் மொன்றியலில் 40-எட்டும் என கனடா சுற்று சூழல் தெரிவிக்கின்றது. வியாழக்கிழமை 43-ஆக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8493 total views