அபாயகரமான மலையில் இருந்து விழுந்து கனடிய தீயணைப்பாளர் மரணம்!

Report
93Shares

கியுபெக்கை சேர்ந்த மலை ஏறுபவர் ஒருவர் சாகச பயணத்திற்கு தலைமை தாங்கி பாகிஸ்தானின் K2 சென்ற சமயம் விழுந்து மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செர்ஜ் டிஸ்சுரௌல்ட் K2 புரோட் பீக் அணியின் ஒன்பது அங்கத்தவர்களில் ஒருவராவார். 86,111-மீற்றர் உயர மலையில் இருந்து சம்பவம் நடந்ததாக கிளப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

53-வயதுடைய இவர் காம்ப் 2-ற்கு அருகில்-6,700மீற்றர்கள் உயரத்தில் அமைந்துள்ள-விழுந்ததாக அணியின் முகநூல் பதிவு ஒன்றின் தெரிவித்துள்ளது.

இவர் விழுந்ததற்கான காரணம் தெரியவரவில்லை.

இரண்டு வருடங்களிற்கு முன்னர் இவரும் இவரது நண்பர் ஒருவரும் இம் மலையில் ஏற முயன்றுள்ளனர். ஆனால் பனிச்சரிவு ஒன்று இவர்களின் முயற்சியை தடுத்து விட்டது.

தீயணைப்பு வீரரான இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவரது உடல் முகாமிற்கு எடுத்து செல்லப்பட்டு பின்னர் பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்திற்கு கொண்டு செல்லப்படும்.2793 total views