கௌரவிக்கப்பட்ட சிவில் உரிமைகள் முன்னோடி!

Report
8Shares

கனடா- இந்த வருடம் Google Doodle மற்றும் 10-டொலர்கள் வங்கி தாள் போன்றனவற்றை அலங்கரித்தவர் வயலா டெஸ்மன்ட். ஆனால் நோவ ஸ்கோசிய நகரம் எங்கே இனப் பிரிவினைக்கு எதிரான பிரபலமான எதிர்ப்பை வயரா டெஸ்மன்ட் ஆரம்பித்தாரோ அந்த வீதிக்கு இவரது பெயரை சூட்டியுள்ளது.

Viola’s Way என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.யூலை 6--டெஸ்மன்டின் 104-வது பிறந்த தின நினைவு விழாவில் பெயரிடப்பட்டது.

1946-நவம்பர் 8, றோஸ்லான்ட் தியேட்டரில் வெள்ளையர்-மட்டும் என்ற பிரிவிலிருந்து வெளியேற மறுத்தமைக்காக இவர் கைது செய்யப்பட்டார்.

அதி விலை உயர்ந்த இருக்கையில் அமர்ந்ததற்காகவும் சிறிய ஒரு வரி மீறய-இவர் பணம் செலுத்திய இருக்கைக்கும் இவர் அமர்ந்த இருக்கைக்கும் விலை வித்தியாசம் ஒரு-சதம் மட்டுமே-என்ற காரணத்திற்காகவும் ஒரு இரவை சிறையில் கழித்தார்.

இவரது கைது கனடாவின் நவீன சிவில் உரிமைகள் இயக்கத்தின் தீப்பொறிகளில் ஒன்றாகும் என அடிக்கடி அழைக்கப்பட்டது.

இப்போது ஏறக்குறைய 72-வருடங்களின் பின்னர் இவர் வெளியேற்றப்பட்ட சம்பவம் நடந்த தியேட்டரிற்கு பக்கத்தில் உள்ள வீதி அவரது நினைவை கௌரவிக்கும் முகமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இப்பெயர் இவரது சகோதரி வான்டா றொப்சனின் ஆலோசனையாகும்.

2010-ல் இவர் இறந்த சமயம் நோவ ஸ்கோசிய அரசாங்கம் இவருக்கு மன்னிப்பு வழங்கியது. வங்கி தாள் ஒன்றில் இடம்பெறும் முதல் கனடிய பெண் என்ற பெருமையையும் 2016-ல் இவர் பெற்றார்.

309 total views