காட்டு குப்பைக்குள் உயிருடன் புதைக்கப்பட்ட பச்சிளங்குழந்தை?

Report
129Shares

யு.எஸ்சில் மொன்ரானா என்ற இடத்தில் ஐந்து மாதங்களே ஆன குழந்தை ஒன்று ஒன்பது மணித்தியாலங்களிற்கும் மேலாக உயிருடன் புதைக்கப்பட்டிருந்தும் அற்புதமாக உயிருடன் இருந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. குப்பைகள் மற்றும் குச்சிகள் குவிக்கப்பட்ட மரங்களடர்ந்த காட்டு பகுதியில் புதைக்கப்பட்டிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஈரம் மற்றும் மண் நிறைந்த ஆடைகள் அணியப்பட்டு குளிரான வெப்பநிலையில் சிறிய காயங்களுடன் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகாரிகள் தேடுதல் பணி குழுவினரின் உதவியுடன் நடாத்திய தேடுதலின் பின்னர் தகவல் அறிந்த ஆறு மணித்தியாலங்களின் பின்னர் காட்டிற்குள் இருந்து குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டதனால் கண்டு பிடிக்க கூடியதாக இருந்ததாக கூறப்பட்டது.

குழந்தை முகம் குப்புற குச்சிகள் மற்றும் குப்பை குவியல்களின் அடியில் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டது.

சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்துள்ளது.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக 32-வயதுடைய பிரான்சிஸ் கிரவ்லி என்பவர் 50,000-டொலர்கள் கிரிமினல் குற்ற சாட்டு பிணையுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

சம்பவத்திற்கான நோக்கம் என்ன என்பது குறித்த தகவல்கள் எதுவும் தெரிய வரவில்லை.

5882 total views