கொலம்பியாவில் வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள் நிலை என்ன?

Report

பிரிட்டிஷ் கொலம்பியா எண்ணெய் வினியோக குழாய் வெடிப்பு காரணமாக வெளியேற்றப்பட்டவர்களில் பெருமளவானோர் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவின் வடபகுதியில் நேற்று மாலை 5.30 அளவில் எண்ணெய் வினியோக குழாயில் வெடிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் குடியிருக்கும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

வெடிப்பு இடம்பெற்ற இடத்திலிருந்து சில கிலோமீடடர் சுற்று வட்டாரத்தில் உள்ள மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்ட போதிலும், தற்போது வெளியேற்ற வலயத்தின் பரப்பளவு குறைக்கப்பட்டுள்ளதனால், ஏனைய மக்கள் அனைவரும் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனேடிய மத்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வெடிப்புச் சம்பவத்தின் போது, குறித்த அந்த குழாயைத் தவிர வேறு எந்த சேதாரங்களோ, காயங்களோ ஏற்படவில்லை என்பதையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

1250 total views