கனேடிய இளம் பெண்கள் ஹேஷ்டேக் மீ டூ இயக்கத்திற்கு ஆதரவு!

Report

இணையத்தில் வைரலாகி வரும் #மீ டூ பாலியல் புகார் இயக்கத்திற்கு 60 சதவீதம் கனேடிய இளம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஹாலிவுட்டில் பெண் பிரபலங்கள் தொடங்கிய இந்த ஹேஷ்டேக் மீடூ இயக்கத்தில், தாங்கள் எதிர்கொண்ட

பாலியல் தொல்லைகளை உலகமெங்கும் பல பெண்கள் வெளிப்படையாக கூறிவருகிறார்கள்.

முக்கியமாக சினிமா துறையின் பெண்கள் சந்தித்து வரும் பாலியல் தொல்லைகளை ஹேஷ்டேக் மீ டூ என்ற இயக்கத்தில் பெண் பிரபலங்கள் தைரியமாக பதிவிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், ஹேஷ்டேக் மீ டூ பாலியல் புகார் இயக்கம் குறித்து சமூக வலைத்தளத்தில் 14 முதல் 24 வயதிற்குட்பட்ட கனேடிய1000 இளம் பெண்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வில்,28 சதவீதம் பேர் ஒட்டு மொத்த ஆதரவும், 40 சதவீதம் பேர் ஓரளவு நம்பகமானவர்களாக இருப்பதாக தெரிவித்தனர். மீதிவுள்ள 11 சதவீதம்பேர் மட்டுமே இதற்கு மாற்று கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கனேடிய ஒட்டுமொத்த பெண்களிடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில், 60 சதவீதம் கனேடிய இளம் பெண்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் ,25 சதவீத கனேடிய இளம் பெண்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

1093 total views