ஒட்டாவா பகுதியில் திடீர் துப்பாக்கி சூடு! 75- வயது முதியவர் உயிரிழப்பு

Report

ஒட்டாவாவின் கிளாரன்ஸ்-ராக்லாண்டில் பகுதியின் இடம்பெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தில் 75 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, ஒட்டாவாவின் கிழக்கே சுமார் 40 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிளாரன்ஸ்-ராக்லாண்டில் பகுதியில் செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஒன்ராறியோ மாகாண பொலிஸார் குறித்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும் இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக முழுமையான தகவல்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

1233 total views