கியூபெக் நகரின் முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி காலமானார்!

Report

கியூபெக் நகரத்தின் சுதந்திரத்தின் கனவுக்காக போராடிய முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி தனது 81-வயதில் காலமானார்.

பெர்னார்ட் லேண்ட்ரி என்பவர், கடந்த 1976 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அன்று முதல் மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்றி வந்தவர்.

இவ்வாறு, அவரது அரசியல் பயணம் தொடர்ந்து செல்ல 25 வருடங்களின் பின்னர் மீண்டும் கடந்த 2001 ஆம் ஆண்டும் தேர்தலில் போட்டியிட்டு கியூபெக்கின் 28 ஆவது முதல்வராக தேர்வாகியிருந்தார்.

மேலும், Parti Quebecois க்கான பொது சேவையில் தனது நான்கு தசாப்தங்களாக வேலை செய்த அவர் முதலில் ஒரு அமைச்சராகவும், பின்னர் கட்சித் தலைவராகவும் முதல்வராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

962 total views