யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு மன்னிப்புக் கோரிய கனடா பிரதமர்!

Report

கனடாவுக்குள் புகலிடம்கோரி நுழைந்த யூதர்களை ஏற்க மறுத்தமைக்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மன்னிப்புக் கோரியுள்ளார்.

குறித்த மன்னிப்பானது, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நேற்று (புதன்கிழமை) அன்று கனேடிய வரலாற்றில் அந்நாடு புரிந்த தவறுகள் அனைத்திற்கும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த 1939ஆம் ஆண்டு மே மாதம் ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரிலிருந்து அமெரிக்காவின் சென் லுர்யிஸ் ஊடாக பாதுகாப்பான இடமாக எண்ணிய கனடாவை அடைய பல யூத மக்கள் முயற்சித்துள்ளனர்.

அத்துடன், சுமார் 900 யூதர்களைக் கொண்ட கப்பலொன்று கடல் வழியாக கனடாவுக்குள் புகலிடம் கோரி நுழைய முற்பட்டது. அவர்களை ஏற்றுக்கொள்ள கனடா மறுத்தமை தற்போது மன வேதனை அளிப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக கடந்த 1914ஆம் ஆண்டிலிருந்து கோமகதா மாரு குழுவினர், ஜப்பானிய சீக்கியர்கள், முஸ்லிம்கள், இந்துக்கள் என பலதரப்பினர் கனடாவுக்கு புகலிடம் கோரி நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

3696 total views