கனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் இரு பயங்கர வெடிப்பு

Report

கனடாவின் சேர்வூட் பார்க் பகுதியில் அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வெடிப்புச் சம்பவங்கள் ஒருவர் உயிரிழந்த நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வெடிப்புச் சம்பவமானது, கனடாவில் சேர்வூட் பார்க் பகுதியில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

முதலாவதாக, சேர்வூட் பார்க் பகுதியில் மாலை 6.30 மணியளவில் குறித்த வெடிப்பானது நிகந்துள்ளது. அதில் காயமடைந்த 21 வயதான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிக்சை பலன்றி உயிரிழந்தார்.

இரண்டாவது வெடிப்புச் சம்பவமானது, இரவு 8.15 மணியளவில் இடம்பெற்றது. இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அவசர பொலிஸ் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர்.

இருப்பினும், அதில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கிடைக்கவில்லை என்றும் சந்தேகநபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர்.

2577 total views