மிசிசாகாவில் ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் படுகாயம்!

Report

மிசிசாகா பகுதியில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்ட பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, மிசிசாகாவில் நெடுஞ்சாலை 401 மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் Blvd பகுதியில் நேற்று (புதன்கிழமை) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த பொலிஸார் படுகாயங்களுடன் இருந்த 44-வயதுடைய பெண்ணை மீட்டு சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருப்பினும், சந்தேகநபர் தொடர்பில் எந்த தகவல்களையும் இது வரை பொலிஸார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் , இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

999 total views