ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பது உறுதி!

Report

அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த ஜிம் வில்ஸனுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதை ஒன்ராறியோ முதல்வர் உறுதி செய்துள்ளார்.

குறித்த அறிவிப்பினை, ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் நேற்று (புதன்கிழமை) கிழக்கு ஒன்ராறியோ பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் தெரிவித்துள்ளார்.

அவரது அரசாங்கத்தில் நடந்த சர்ச்சைக்குரிய விடயம் தொடர்பில் நீண்ட நாட்கள் மௌனமாக இருந்த ஒன்ராறியோ முதல்வர் டக் ஃபோர்ட் இதனை உறுதிபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் கடந்த வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றினை வெளியிட்ட முதல்வர், போதைப்பொருளில் இருந்து விடுபடும் சிகிச்சை காரணங்களுக்காக அவர் தனது பதவியை இராஜினாமா செய்ததாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

739 total views