கனடாவில் இராணுவ வீரர் போல் நடித்த வாலிபர் கைது!

Report

கனடாவின் ஒன்றாரியோ பகுதியில் இராணுவ வீரர் போல் நடித்து நிதி சேகரித்த குற்றத்திற்காக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, ஒன்றாரியோ மாகாணத்திலுள்ள கிழக்கு ஒட்டாவாவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று அரங்கேறியுள்ளது.

குறித்த சம்பவத்தில், 47 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தனது சொந்த நிறுவனமொன்றிற்காக இராணுவ வீரரின் உடைகளை அணிந்து கொண்டு பொது மக்களிடம் நிதி வசூலித்துள்ளார்.

இதையடுத்து, பொது மக்களின் சந்தேகத்தில் பேரில் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.

9415 total views