வீடியோ கேம் வழியாக வாலிபர்களை இலக்கு வைக்கும் சிலர்

Report

வீடியோ கேம் ஒன்றை பயன்படுத்தி இளவயது பிள்ளைகளை பாலியல் துன்புறுத்தல்களுக்குள்ளாக்கும் புதிய ஒரு அச்சுறுத்தல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த கனடா பொலிசார் முயன்று வருகின்றனர்.

Fortnite எனப்படும் ஆன்லைன் வீடியோ கேம் வழியாக இளவயது பிள்ளைகளை கவரும் இந்த குழு அல்லது நண்பர்களுக்குள் நுழையும் பாலியல் காமுகர்கள் தங்களுடைய நிர்வாணப்படங்களை அனுப்பினால் அந்த விளையாட்டில் முன்னேறிச் செல்ல வாய்ப்பளிப்பதாக கூறி பெற்று வருகின்றனர்.

இதையடுத்து, இந்த படங்கள் இன்ஸ்டாகிராம் வழியாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகின்றனர். அந்த குறிப்பிட்ட நபர், மேலும் நிர்வாணப் படங்களை அனுப்பும் படி நச்சரிப்பார். அவ்வாறு அனுப்பாவிட்டால் ஏற்கனவே அனுப்பப்பட்ட படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டுவார்.

இதுவரை மூன்று வழக்குகளில் இளவயது பிள்ளைகள் நிர்வாண படங்களை அனுப்பும்படி மிரட்டப்பட்டுள்ளார்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், பெற்றோருக்கு இந்த விளையாட்டு மற்றும் அதனால் பிள்ளைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள பொலிசார் பள்ளிகளுக்கும் இது குறித்து தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

7761 total views