எட்மன்டன் பகுதியில் கத்தி குத்து; பொலிஸார் தீவிர விசாரணை!

Report

எட்மன்டன் பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஆண் நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவமானது, மேற்கு எட்மன்டன் 154 தெரு மற்றும் 101 அவென்யூக்கு குதியில் புதன் கிழமை மாலை 7.30 மணியளவில், அரங்கேறியுள்ளது.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எட்மன்டன் பொலிஸார் கத்தி குத்து காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஆண் நபர் ஒருவர் இருந்ததாக அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும், குறித்த நபர் உரிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இந்நிலையில், சி.டி,வி செய்தி கொடுத்த தகவலில் படி குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணையோ மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

1048 total views