கனடாவில் கஞ்சாவை பயன்படுத்தும் வயது வரம்பு அதிகரிக்கும் புதிய சட்டமூலம்!

Report

கஞ்சாவை பயன்படுத்துவதற்கான வயது வரம்பு 21ஆக அதிகரிக்கும் சட்டமூலமொன்று கனடாவின் கியூபெக் மாகாண அரசால் நேற்று (புதன்கிழமை) முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வீதிகள் மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கஞ்சா பயன்படுத்துவதை தடைசெய்யும் மற்றொரு சட்டமூலமும் முன்வைக்கப்பட்டது.

கனடாவில் கஞ்சா பயன்பாடு, சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளதோடு அதனை பயன்படுத்துவதற்கான வயது வரம்பு 18 மற்றும் 19 ஆகிய இரு வயதெல்லைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், குறித்த வயதில் கஞ்சாவை பயன்படுத்துவது மூளை வளர்ச்சியை பாதிக்குமென்பது வைத்திய நிபுணர்களின் கருத்தாகவுள்ளது.

இந்நிலையில், கியூபெக் மாகாணம் கடந்த அக்டோபர் மாதம் அதனை பயன்படுத்தும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பாகவாக்குறுதி வழங்கியிருந்ததோடு, அது தொடர்பான பிரசாரங்களையும் முன்னெடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

4509 total views