மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதியதால் நேர்ந்த சோகம்

Report

வோகன் நகரில் நெடுஞ்சாலை 407 -இல் மூன்று கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது, வோகன் நெடுஞ்சாலை 400, நெடுஞ்சாலை 407 க்கு அருகே நேற்று (புதன்கிழமை) மாலை 5:30 மணியளவில் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில், கார்கள் ஒரு மினிவான் வாகனம் மீது மோதிக்கொண்டதில் 69-வயது நிறைந்த நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் விபத்தில் படுகாயமடைந்த நபரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இருப்பினும்,குறித்த நபர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதன் பின்னர், குறித்த வீதிக்கான போக்குவரத்துக்கள் மூடி விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதையடுத்து, குறித்த நெடுஞ்சாலை பகுதிகளின் வீதிகளை இரவு 10 மணியளவில் திறந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

7194 total views