பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான சந்திப்பு குறித்து விமர்சனம்!

Report

கனேடிய மத்திய அரசுக்கும் மாகாண முதலமைச்சர்களுக்கும் இடையில், நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில்,போதிய நேரம் ஒதுக்கப்படவில்லையென குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுடனான குறித்த சந்திப்பு நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில், இதில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக ஆராயப்படவுள்ளது.

இதில், மத்திய அரசின் நிகழ்ச்சிநிரலில் மாகாண பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கு ஒரு மணித்தியாலம் மாத்திரமே ஒதுக்கப்பட்டுள்ளதாக மாகாண முதலமைச்சர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது, மாகாண பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுக்காமல் புறந்தள்ளுவதாக அமைந்துள்ளதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள மனிடோபா முதலமைச்சர், எண்ணெய் உற்பத்தியில் ஈடுபடும் பிராந்தியங்களினால் நாட்டின் பல மாகாணங்கள் பாதிப்பை எதிர்கொள்வதாக குறிப்பிட்டார்.

மேலும், பிரதமருடனான சந்திப்பு குறித்த நிகழ்ச்சி நிரலை மாற்றவேண்டும் என்றும், இல்லாவிட்டால் மாற்றிக் காட்டுவோம் என்றும் எச்சரித்துள்ளார்.

குறித்த நிகழ்வு குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அல்பேர்டா முதலமைச்சர் கடிதமொன்றையும் அனுப்பியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார்.

1480 total views