உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் கனடா பின்னடைவு!

Report

2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையில் கனடா 7-ஆவது இடத்தில் உள்ளது

அதன்படி, கனடாவின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி 184 நாடுகளுக்கு வீசா இல்லாமல் சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவே, கடந்த 2014 ஆம் ஆண்டு உலக சக்திவாய்ந்த கடவுசீட்டு பட்டியலில் 2 ஆம் இடத்தில் கனடா இருந்தது.

இதை தொடர்ந்து, கடந்த 2015 இல் 4, 2016 முதல் கடந்த வருடம் வரை கனடா 6 ஆவது இடத்தில இருந்த நிலையில் தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்நிலையில், தற்போது 2019 ஆம் ஆண்டில் உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்டு பட்டியலில் தரவரிசையை வெளியிடப்பட்டது.

குறித்த தகவலை, ஆண்டுதோறும் கருத்துக்கணிப்பை வெளியிடும் ஹென்லி கடவுச்சீட்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள பட்டியலின் படி, உலகின் அதிசக்தி வாய்ந்த கடவுச்சீட்டு என்ற பெருமையை ஜப்பான் நாட்டு கடவுச்சீட்டு இரண்டாவது ஆண்டாக தொடர்ந்தும் முதலாவது இடத்தை பெற்றுள்ளது.

29392 total views