இரண்டு வாகனங்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பெண் ஒருவர் பலி!

Report

ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் பெண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, ஒட்டாவாவின் ஃபாலோவ்ஃபீல்ட் சாலையின் மூடி டிரைவ் தெற்கில் காலை சுமார் 7:40- மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், இரண்டு வாகனங்கள் இடையே ஏற்பட்ட மோதலை காரணாமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த காரில் இருந்த 10-வயது குழந்தை தல, மற்றும் கால் பகுதி காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

இதில், மற்றொரு வாகனத்தில் இருந்த பெண் ஓட்டுநர் கழுத்தில் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.

மேலும், குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு விசாரணை முன்னெடுக்க பட்டு வருவதாக ஒட்டாவா பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

1099 total views