பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்திய தனித்துவிடப்பட்ட நீர் நாய்கள்!

Report

கனடாவின் நிலவும் பனிப் பொழிவு காரணமாக, பாலூட்டியான நீர் நாய்கள் தமது இருப்பிடங்களை தேடி அலையும் காட்சி பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அண்மைக் காலமாக நிலவும் பனிப் பொழிவு மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக இத்தகைய கடல் உயிரினங்கள் வாழ்விடங்களை விட்டு தனித்து விடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, குறித்து உயிரினங்களை நகரை விட்டு வௌியேற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ரொட்டிக்டன் நகர மேயர் ஷெய்லா பிட்ஸ்ஜெரால்ட் தகவல் கோரியுள்ளார்.

நீர் நாய்கள் பெருந்தெருக்களையும், வீடுகளுக்கு செல்லும் பாதைகளையும் மறித்து நூற்றுக்கணக்கில் கடந்து செல்கின்றன.

இந்தநிலையில், 20 நீர் நாய்கள் குறித்த நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவற்றில் இரண்டு உயிரிழந்துள்ளன.

நீர் நாய்களின் இந்த திடீர் பிரசன்னம் தொடர்பாக தீர்வை காண்பதற்கு நீரியல் வளத்துறை மற்றும் கடலுயிர் சார்ந்த திணைக்கள அதிகாரிகள் நகரத்திற்கு சென்றுள்ளனர்.

634 total views