பொதுமக்களின் காரசாரமான கேள்விக்கு பதில் அளித்த ஜஸ்ரின் ட்ரூடோ!

Report

குழாய்நீர் திட்டம், கார்பன் வரி மற்றும் சுதேச உரிமைகள் தொடர்பில் பொதுமக்கள் எழுப்பிய காரசாரமான கேள்விக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பதில் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலை,ரெஜினா பல்கலைக்கழகத்தில் நேற்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போது தெரிவித்துள்ளார்.

அந்தவகையில், நிகழ்வில் சவூதி அரேபியாவுடனான ஒரு சர்ச்சைக்குரிய ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து குடியேற்றம், பற்றாக்குறைகள், மன நலத்திற்கான ஆதரவு, அதே போல் சுங்க வரி மற்றும் கார்பன் வரி போன்ற 20-க்கும் மேற்பட்ட கேள்விகளுக்கும் அவர் தனது பதிலை வழங்கியிருந்தார்.

மேலும், இதன் போது இரும்பு தொழிற்சாலையில் பணிபுரியும் ஒருவர், தீர்வைகளுடன் ஏன் அமெரிக்காவுடனான ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது என கேள்வியை தொடுத்திருந்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய, பிரதமர் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கொண்டிருக்கும் அனைத்து திட்டங்களும் கனேடிய மற்றும் அமெரிக்கத் தொழிலாளர்கள் இருவருக்கும் பிரச்சினையை ஏற்படுத்தும் விதத்தில் அமைகின்றது.

இருப்பினும், அந்த கையெழுத்திடுவதற்கு முன்னர் இரும்பு மற்றும் அலுமினிய கட்டணத்தை குறைப்பதற்கு ஜனாதிபதியை சமாதானப்படுத்த நான் விரும்புகிறேன்.

மேலும், அது சாத்தியமாக இருக்காது என்றும், இந்த சம்பவம் அமெரிக்க நிர்வாகத்திடம் இருந்து தெளிவாக தெரிகின்றது என்று அவர் கூறினார்.

1006 total views