ரொறன்ரோவில் சாலையை கடந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்!

Report

ரொறன்ரோவில் சாலையை கடந்த முதியவர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த, சம்பவம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்ற முதலாவது பாதசாரி உயிரிழப்பு என பொலிஸார் கருத்து தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து, தெற்கு குயின் தெரு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் முதியவர் சாலையை கடந்த போது இடம்பெற்றுள்ளது.

இதன் பின்னர் முதியவர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில், உயிரிழந்தவர் 60 வயதுடையவர் என்று தெரிவித்த பொலிஸார், குற்றச்சாட்டு தொடர்பில் எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.

மேலும், குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் உள்ள சி.சி.ரி.வி. காணொளிகள் மூலம் விசாரணை நடத்திவரும் அதேசமயம் சாட்சியங்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1643 total views