காணாமல் போன 34--வயதான யுவதி பனியில் சிக்கி உயிரிழப்பு!

Report

கனடாவின் மைட்ஸ்டோன் நகரில் காணாமல் போன 34--வயதான யுவதி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணான, அமந்தா மிச்செலுக் (வயது-34) என்ற யுவதியும் அவரது தந்தையும் சென்ற வாகனம் கடந்த வியாழக்கிழமை பனியில் சிக்கியது.

அதனைத் தொடர்ந்து, நெருப்பு மூட்டுவதற்காக இருவரும் விறகுகளை தேடிச்சென்ற போது அமந்தா காணாமல் போயிருந்தார்.

இந்நிலையில், குறித்த பெண்ணின், சடலம் கடந்த வெள்ளிக்கிழமை நெல்வயலில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கனடாவில் தற்போது, பனி அதிகரித்துள்ளதால் ஏற்பட்ட கடுமையான குளிரினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த பகுதியில் வெப்பநிலை கடுதியாக குறைவடைந்துள்ளது. இக்காலத்தில் பனிச்சறுக்கல் விளையாட்டுக்களில் ஈடுபடவேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் பனி அதிகரித்துள்ளதால் வாகன விபத்துக்கள் தற்போது, அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

4262 total views