மொன்ட்ரியல் பாடசாலையில் கார்பன் மோனாக்ஸைட் கசிவு – 43 பேர் மருத்துவமனையில் அனுமதி!

Report

மொன்ட்ரியல் பாடசாலை ஒன்றில் ஏற்பட்ட, கார்பன் மோனாக்ஸைட் கசிவு காரணமாக 43 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம், நேற்று (திங்கட்கிழமை) டெஸ் டிகோவ்ரெர்ஸ் ஆரம்ப பள்ளியில் இடம்பெற்றுள்ளதாக மொன்ட்ரியல் தீயணைப்பு துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 25 சிறுவர்களும் 8 முதியவர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் 9 மாணவர்கள் பாடசாலையிலேயே நினைவிழந்ததாகவும், சிலர் ஒவ்வாமை காரணமாக வாந்தியெடுத்தனர் என்றும் ஒரு சிலர் மயக்கமடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணையில், நோய்வாய்ப்பட்ட குறித்த குழந்தைகள் ஆறு வயதுக்கும் 13 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும், குறித்த பாடசாலை மூடப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1213 total views