கனடா மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய வாலிபருக்கு ஆயுள் சிறை!

Report

கனடாவில் கடந்த 2017-ம் ஆண்டு மசூதியில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தி 6 -பேரை கொன்ற வாலிபருக்கு ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி 29-ம் தேதி கனடாவின், கியூபெக் சிட்டியில் உள்ள மசூதியில் மாலை பொழுதில் தொழுகை நடைபெற்றபோது, அலெக்சாண்டர் பிசோனெட் (வயது 29) என்பவர் துப்பாக்கி சுட்டு நடத்தினர்.

இதில், குறித்த வாலிபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் பலத்த காயமடைந்தனர்.

இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய அலெக்சாண்டர் என்பவரை கைது செய்த பொலிஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அலெக்சாண்டர் பிசோனெட் மீதான குற்றம் நிரூபணமானது. இதையடுத்து அவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அத்துடன், 40-ஆண்டுகள் வரை பரோல் பெற முடியாது என்றும் உத்தரவிட்டார்.

1698 total views