கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கொள்ளையர் -பின்னர் பொலிஸார் அதிரடி!

Report

ரொறன்ரோவில் வங்கி ஏ.டி.எம். ஒன்றில் கொள்ளையிட்டு சென்ற ஒருவரை, பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

குறித்த சம்பவம்,நெடுஞ்சாலை 404ற்கு கிழக்கே, விக்டோரியா பார்க் அவனியூ மற்றும் வான் ஹோர்ன் அவனியூ பகுதியில் உள்ள வங்கி ஏ.டி.எம்.-ல் கடந்த பிப்ரவரி முதலாம் திகதி இரவு 7.21 அளவில், அரங்கேறியுள்ளது.

சம்பவத்தில், இயந்திரத்தில், பணம் எடுக்க சென்ற பெண்ணிடம் பின்புறமாக வந்த ஆண் ஒருவர்,கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி பணத்தைப் பெற்று சென்றுள்ளார்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்படத்தின் படி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

பின்னர், நான்கு நாட்களின் அதே இடத்தில் மாலை ஆறு மணியளவில் அதே பாணியில் பெண் ஒருவரிடம் கொள்ளை இடம்பெற்றுள்ளது.

இதில், சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், இச்சம்பம் குறித்து தகவல் தெரிந்த பொது மக்கள் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2010 total views