இரண்டு ஈழத்தமிழர்களை கொலை செய்தவருக்கு ஆயுட்காலச் சிறை!

Report

ரொறன்ரோவில் இரண்டு ஈழத்தமிழர்கள் உட்பட எட்டுப் பேரைக் கொலை செய்த புறூஸ் மக்காதருக்கு, ஆயுட்காலச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில், ஸ்கந்தராசா நவரெட்ணம், கிருஷ்ணா கனகரட்ணம் உள்ளிட்ட எட்டுப்பேரை தொடர் கொலையாக புரிந்தமை இறுதித் தீர்ப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கப்பட்டது.

குறித்த மக்காதர், மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர் நீதிமன்றில் மன்னிப்புக் கோரியிருந்த நிலையில்,ஆயுட்காலச் சிறை மற்றும் 25 ஆண்டுகளுக்கு பிணை மனுக்கோர முடியாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, தற்பொழுது 67 அகவையுடைய மக்காதருக்கு 91 அகவை வரை நன்நடத்தை கோரி விண்ணப்பிக்க முடியாது.

பொதுமக்களின் பாதுகாப்பு, மக்காதரின் அகவை, சமூகத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீள இடம் பெறுவதனை தடுத்தல் ஆகிய காரணிகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு காலப்பகுதி வரையில் மக்காதர் இந்த தொடர் படுகொலைச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலையுண்ட அனைவரும் பாலியல் முறைகேடு மற்றும் சித்தரவதைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளதாக புகைப்படங்களின் உள்ளிட்ட பல்வேறு சான்றுகள் மூலம் உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

3591 total views