கைத்துப்பாக்கிகள் வீதிகளில் பயன்படுத்தப்படுவதனை தடுப்பது குறித்து ஆராய்வு!

Report

கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் துப்பாக்கிகள் போன்றன கனேடிய வீதிகளில் பயன்படுத்தப்படுவதனை தடுப்பதற்கான வழிகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகக் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை, எல்லைப் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைப்பட்ட குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் அமைச்சர் பில் பிளேயர் தெரிவித்துள்ளார்.

மேலும், துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுதவிர, ஆயுத விற்பனை, ஆயுத கடத்தல்கள் போன்றவற்றையும் முழு அளவில் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் பிளேயர் சுட்டிக்காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

979 total views