வின்னிபெக் அவென்யூ பகுதியில் வீடு ஒன்றில் தீ விபத்து!

Report

குறித்த தீ விபத்து, வின்னிபெக் அபெர்டீன் அவென்யூ சல்டர் ஸ்ட்ரீட் பகுதியில் வீடு ஒன்றில் வெள்ளிக்கிழமை இரவு சரியாக 7-30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, தகவல் தெரிவிக்கப்பட்டத்தின் அடிப்படையில் தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இருப்பினும், வீட்டின் உரிமையாளர் அனைவரும் குறித்த தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்னதாக பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்நிலையில், குறித்த குழுவினர் தங்கள் பணியை தொடர்ந்ததால், அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து தடைசெய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

962 total views