கனேடிய விமானப்படையில் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்!

Report

கனேடிய விமானப்படையில் ஆளில்லா போர் விமானங்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக, கனேடிய விமான படையின் தலைவர் லெப்ரினன்ட் ஜெனரல் அல் மைன்ஸிங்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

ஆளில்லா விமானங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் கனடா கடந்த 2000ஆம் ஆண்டு முதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில், எதிர் வரும் ஆறாண்டு காலப் பகுதியில் இவ்வாறு ஆளில்லா ஆயுதம் தாங்கிய போர் விமானங்களை பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 20 ஆண்டு காலப் பகுதிக்காக கனடிய விமானப் படைக்காக 62 பில்லியன் நிதி ஒதுக்கப்படும் எனவும் ஜெனரல் அல் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1876 total views