பிரம்ப்டன் பகுதியை சேர்ந்தவரே துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்

Report

டவுன்ரவுன் இரவு விடுதியில் இடமபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரை அடையாளம் கண்டுகொண்டுள்ளதாக ரொறன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பிரம்ப்டன் பகுதியை சேர்ந்த, ஜானோய் கிரிஸ்டியன் என்ற 24 வயதுடைய என ரொறன்றோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை நாடாளுமன்ற வீதிக்கு அருகில் குயின் ஸ்ட்ரீட் ஈ பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த குறித்த நபர், வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தமை குறிப்பிடத்த்க்கது.

4022 total views