மின்சாரமின்றி தவித்த பிரிட்டிஷ் கொலம்பிய மக்கள்

Report

பிரிட்டிஷ் கொலம்பியாவின் தெற்கு கரையோரப் பகுதிகளில் நிலவிய கடும் காற்று மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த இரண்டு தினங்களாக (வௌ்ளி மற்றும் சனிக்கிழமை) பலமான காற்று காரணமாக பல பகுதிகளுக்கு மின்சார விநியோக தடை ஏற்பட்டது.

இதனையடுத்து சுமார் 70,000 மின்சார பாவனையாளர்களுக்கான விநியோகம் மாத்திரம் முதல்கட்டமாக சீரமைக்கப்பட்டது.

90 கிலோமீற்றர் வரையான பகுதிகளில் பலமான காற்று காரணமாக மின்சாரம் ஒரு மணித்தியாலம் வரை தடைபட்டிருந்தது.

இந்தநிலையில், கடும் சீற்றமான காலநிலையையும் பொருட்படுத்தாமல் தமது குழுவினர் மிக மும்முரமாக பணியாற்றியதாக பிரிட்டிஷ் கொலம்பியாவின் நீர்மின்னுற்பத்தி நிலைய பேச்சாளர் கெவின் அகியுனோ தெரிவித்துள்ளார்.

1894 total views