கனேடிய முன்னாள் நிதி அமைச்சர் தனது 81-வது வயதில் மரணம்!

Report

கனேடிய முன்னாள் நிதி அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் கனேடிய தூதுவருமான மைக்கல் வில்சன் தனது 81-வது வயதில் காலமானார்.

அவருடைய மறைவை, ரொறன்ரோ பல்கலைக்கழகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிபடுத்தியுள்ளது.

வில்சன் கடந்த 2012 முதல் 2018ஆம் ஆண்டுவரை குறித்த பல்கலைக்கழகம் வேந்தராக பணியாற்றி வந்தார்.

இதையடுத்து, கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக ரொறன்ரோவின் நாடாளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிவர் ஆவார்.

முன்னாள் பிரதமர் பிரையன் முல்ரோனி ஆட்சிக் காலத்தில் இவர், நிதி அமைச்சராகவும், சர்வதேச வர்த்தக அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

அதனை தொடர்ந்து, 2006ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2009 அக்டோபர் மாதம் வரை அமெரிக்காவிற்கான கனேடிய தூதுவராகவும் சேவையாற்றியுள்ளார்.

அவரது மகன் 1995-ஆம் தற்கொலை செய்துக் கொண்டதை தொடர்ந்து வில்சன் மனநல ஆர்வலராகவும் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

1191 total views