கனடாவில் இந்த வாரத்தின் இரண்டாவது நிலநடுக்கம் பதிவு!

Report

கனடாவின் சட்பெரி மாகாணத்தில் 3.5 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த நிலநடுக்கம், கனடாவின் சட்பெரி மாகாணத்தில் பல பகுதிகளிலும் சுமார் 7 கிலோ மீட்டர் கடல் ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலநடுக்கத்தால், எந்த ஒரு உயிர்சேதமோ, பொருட்சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரையில் எதுவும் வெளியிடப்படவில்லை.

இருப்பினும், குறித்த நிலநடுக்கத்தின் அதிவானது பல்வேறுபகுதிகளில் உணரப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக, வீடுகள் குலுங்கின மேலும், மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

இதேவேளை, கனடாவின் சட்பெரி மாகாணத்தில் கடந்த புதன்கிழமையும் 2.9 ரிச்டர் அளவில் மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தது.

கனடாவின் சட்பெரி மாகாணத்தில் ஒரே வாரத்தில் இரண்டு நிலநடுக்கங்கள் உணரப்பட்டமையானது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

2846 total views