லண்டன் பகுதியில் திடீர் தீ விபத்து -கட்டிடத்தில் இருந்த 22 பேர் வெளியேற்றம்!

Report

லண்டன் பகுதியில் இடம்பெற்ற திடீர் தீ விபத்து காரணமாக கட்டிடத்தில் இருந்த 22-பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த தீ விபத்து, லண்டன் பகுதியில் 140 லாங்ட்த் ஸ்ட்ரீட் சரியாக புதன் கிழமை காலை 8:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், கட்டிடத்தில் இருந்த பெண் ஒருவர் அதிக அளவு படுகாயமடைந்த நிலையில், சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில், 22 பேர் குறித்த கட்டிடத்தில் இருந்த பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த கட்டிடத்தில் முன்னதாக ஜூன் 2015 ல் ஏற்பட்ட 39 வயதான கிறிஸ்டோபர் ஜோசப் மானுவல் இறந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் வெளியிடப்படவில்லை .

1138 total views