ரொறன்ரோ கிழக்கு பகுதியில் கோர விபத்து – 3 பேர் படுகாயம்!

Report

ரொறன்ரோவின் கிழக்கு பகுதியில் பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ரொறன்ரோ பிளூர் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஸ்டீல்ஸ் அவனியூ பகுதியில் நேற்று காலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதுண்டு விபத்க்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து ஒருவர் உயிராபத்தான நிலையில் உலங்குவானூர்தி மூலம் ரொறன்ரோ சணிபுரூக் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டார்.

மேலும், அதே வயதையுடைய இருவர் சிறிய காயங்களுடன் தரை மார்க்கமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதையும் ரொறன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்தினை அடுத்து ஸ்டீல்ஸ் அவனியூவில் கிழக்கு நோக்கிய வழித்தடங்கள் அனைத்தும் போக்குவரத்துக்குத் தடை செய்யப்பட்டு சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

1562 total views