ஒட்டாவா குடியிருப்பு பகுதியில் பாரிய தீப்பரவல்! சுமார் 2 மில்லியன் பெறு மதியான பொருட்கள் சேதம்!!

Report

ஒட்டாவாவின் சரித்திரப் புகழ் மிக்க, நூற்றாண்டுகள் பழமையான பைவார்ட் மார்க்கட் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பாரிய தீப்பரவலினால், சுமார் 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்து, வில்லியம் வீதியில், விட்டோரியா டிராட்டோரியா எனப்படும் இத்தாலிய உணவகம் ஒன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) ஏற்பட்டது.

குறித்த பகுதிக்கு அருகில், சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான பல்வேறு உணவகங்கள், கடைகள் வெளிப்புற சிறு விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர், உணவகத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றி, கடுமையான போராட்டத்திற்கு மத்தியில் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும், இந்த தீ விபத்தின் போது, அதிஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறித்த தீ பரவலானது எப்படி பரவியது என்பது குறித்து பொலிஸார் தற்போது தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

1910 total views