தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது: ஒருவர் உயிரிழப்பு!

Report

வான்கூவர் பகுதியில் அமைந்துள்ள B.C. தேவாலயத்தில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், நேற்று காலை மக்கள் விசேஷ பிராத்தனையில் ஈடுபடும் சமயத்தில் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, வான்கூவர் Kelowna 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குறித்த பகுதிக்கு விரைந்து வந்த பொலிஸார் 25-வயதுடைய குற்றச்சாட்டு தொடர்புடைய நபரை காலை 10 மணியளவில் கைது செய்தனர்.

இது தொடர்பில் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக Salmon Arm RCMP பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த துப்பாக்கி சூட்டிற்கு இலக்கான நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும், சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் உள்ளனர்.இருப்பினும், இது தொடர்பில் வேறு எந்த தகவலும் பொலிஸார் வெளியிடவில்லை.

614 total views