கனடாவில் மாயமான 3-வயது சிறுவன் அவரது தாயுடன் சேர்த்து பத்திரமாக மீட்பு!

Report

டொரோண்டோவின் ஸட்பெரி பகுதியில் வைத்து மாயமான 3-வயது சிறுவன் மற்றும் அவரது தாய் ஆகியோரை பொலிஸார் பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளனர்.

3-வயது சிறுவன் மற்றும் அவரது தாய் ஆகியோர் கடைசியாக சர்ட்பரி டொராண்டோ பகுதியில் கடைசியாக தென் பட்டதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து, அம்பர் அலர்ட் 911 பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதின் படி, விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், குறித்த இருவரும், கோட்டை யார்க் பொலிவார்ட் மற்றும் லேக் ஷோர் அவென்யூ வெஸ்ட் பகுதியில் வைத்து பத்திரமாக மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த குழந்தையை மீட்க உதவிய பொது மக்களுக்கு டொரோண்டோ பொலிஸார் நன்றி தெரிவித்துள்ளனர்.

1520 total views