கனடாவில் வெடி பொருட்கள் வைத்திருந்த தந்தை மற்றும் மகன் கைது!

Report

கனடாவில் வெடி பொருட்கள் வைத்திருந்த, குற்றசாட்டில் தந்தை மற்றும் அவரது மகன் ஆகியோர் கைது செய்யப்ட்டுள்ளனர்.

இது தொடர்பில் மே 9-அன்று யார்க் பிராந்திய பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பட்டதின் படி, குறித்த நபர்களை ரிச்மண்ட் ஹில் குடியிருப்பில் வைத்து கைது செய்தனர்.

இவர்கள் இருவரும், ஷாஃப்ட்ஸ்பரி அவென்யூ மற்றும் பாதூர்ஸ்ட் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

இது தொடர்புடைய குற்றச்சாட்டில் 47-வயதுடைய (Reza Mohammadiasl) ரஸா முகம்மதிசல் மற்றும் ( Mahyar Mohammadiasl) மகர் மொஹமதியாஸ்ல் 18-வயது மே-14 அன்று நீதிமன்றத்தில் தோன்ற இருக்கிறார்கள்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக Crime Stoppers என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

6307 total views