அமெரிக்கா விமான விபத்தில் கனேடிய பெண்ணொருவர் உட்பட 6 பேர் உயிரிழப்பு!

Report

அமெரிக்கா விமான விபத்தில், கனடாவின் ரிச்மன்ட் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய எல்சா வில்க் என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் 2 சுற்றுலா விமானங்கள் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் சர்வதேச பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒருவர் கனேடியர் என்றும் அலாஸ்கா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் ரிச்மன்ட் பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய எல்சா வில்க் என பொலிஸார் அடையாளம் கொண்டுள்ளதாகவும் அவர் குறித்து உறவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அலாஸ்கா மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்குள்ளான ஒரு விமானத்தில் இரண்டு விமானிகள் உட்பட 16 பேர் இருந்ததாக தெரிவித்த அதிகாரிகள் அதில் 14 அமெரிக்கர்கள், ஒரு கனேடியரும் மற்றும் ஒரு அவுஸ்ரேலியரும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.

1217 total views